< தமிழில் டேலி Tally.ERP9 >

Sep 1, 2010

டேலி எங்கே படிக்கலாம் ?!



டேலி எங்கே படிக்கலாம்..?!
சில நாட்களுக்கு முன்பு நண்பருடைய அலுவலகத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு டாக்ஸ் கன்சல்டன்ட் அலுவலகம்.

அந்த அலுவலகத்திற்கு ஒரு பெண் டேலி ஆபரேட்டர் தேவை என நாளிதழில் விளம்பரம் செய்த அனுபவத்தை கூறினார்.

அந்த ஞாயிற்றுகிழமை விளம்பரம் தேவை பகுதியில் பார்த்து ஏராளமான பெண்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

நண்பர் விளம்பரத்தில் அந்த பகுதியில் வசிக்கும் கணக்கு எழுத தெரிந்த டேலி மென்பொருளை இயக்க தெரிந்த பெண் தேவை என தெளிவாக விளம்பரம் கொடுத்திருந்தார்.

நேர்முக தேர்விற்கு வந்த பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் 7000 ரூபாய் சம்பளத்தை கேட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் அனைவரும் பல்வேறு கடைகளில் விற்பனை பிரிவில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்தனர்.

ஆனால் டேலி கோர்சை
CSC-யில் படித்தேன்.

APPOLO-வில் படித்தேன்.

மக்கள் கல்வி இயக்கத்தில் படித்தேன் என்று சொன்னார்களாம்!





சரி , அப்போ டேலி உங்களுக்கு அத்துபடி தானே என்று கேட்ட போது தான் வில்லங்கமே ஆரம்பமானது!
நேர்முக தேர்வுக்கு வந்தவர்களெல்லாம் எங்களுக்கு டேலி தெரியும்.ஆனால் பில் புக் பர்சேஸ் பைல் வைத்து எப்படி என்ட்ரி போடுவதென்று ஒரு நாள் சொல்லிக் கொடுங்கள்.அதை வைத்து நாங்கள் பிக்அப் செய்து கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
காரணம் கேட்ட போது நீங்க டேலி 9 சாப்ட்வேர் வச்சிருக்கீங்க .நாங்க படிச்சது டேலி 6.3 என்று ஒருவரும் நான் டேலி 7.2 படிச்சேன்னும் சொல்லியிருக்காங்க.
வேலை தேடி நேர்முக தேர்விற்கு வந்தவர்கள் என்ட்ரி போட சொல்லி கொடுங்கள் என்பதை கேட்டதும் நண்பர் அரண்டு விட்டார்!

6 comments:

Unknown said...

எல்லாம் அப்பிடித்தான் இருக்கா

வடுவூர் குமார் said...

இத்தொழிலில் மட்டும் அல்ல எங்கள் துறையிலும் வேலைக்கு வரும் பலருக்கு தொழிலறிவு இப்படித்தான் இருக்கு.

Anonymous said...

Few years ago...all companies try to provide training when someone joining there organisation. Now a days no more training. They should give provide training.

Anonymous said...

If someone is completed some form of study....they can learn anything. Pls give life path to lower skilled people also and make them to understand...

Anonymous said...

வெறும் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது அனுபவமும் வேண்டும்!

KUTTY JERISH said...

appo enga padikalamnu neengalum sollala

Post a Comment