< தமிழில் டேலி Tally.ERP9 >

Sep 15, 2010

SMS in Tally.ERP9 இருப்பிடம் தேடி தகவல் தரும் எந்திரன் ரிலீஸ் BETA 2.0

Tally ERP9





Tally.ERP9 டேலியில் SMS வசதி ( SMS IN TALLY.ERP9 )

முன்பெல்லாம் SSLC மற்றும் பிளஸ் 2 ரிசல்ட்களை பேப்பரில் தான் பார்க்க முடியும்.
காலை பத்து மணிக்கு வரும் ஸ்பெஷல் எடிசன் ( SPECIAL EDITION ) பேப்பரில் தேர்ச்சியடைந்த எண்கள் மட்டுமே பிரசுரமாயிருக்கும்.
இப்ப காலம் மாறி போச்சு.. இன்டர்நெட்டில் ரிசல்ட் பார்த்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். ரிசல்ட் வெளியாகிற அன்றைக்கு காலையில் 10 மணிக்கு குறிப்பிட்ட 5 இலக்க எண்ணிற்கு உங்கள் ரிஜிஸ்டர் நம்பரை SMS அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் ரிசல்ட் உங்கள் செல் போனுக்கு வந்து விடும். அந்த SMS-ல் உங்கள் பெயர் , சப்ஜெட் வாரியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல் இருக்கும்.

SMS என்றாலே வேகம் விரைவு தெளிவு தகவல் தானே.
விரல் நுனியில் விபரம் நீங்கள் எங்கே இருந்தாலும் தகவல் உங்களை நிழல் போல தேடி வரும்.

SMS மூலம் எப்படி தகவல் நம்மை வந்தடைகிறது தெரியுமா...
சமீபத்தில் தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர் பணி சரிபார்க்கும் பணியை நடத்தியது. இந்த கள ஆய்வு மூலம் புதிய வாக்காளர்களை சேர்க்கவும், தகுதியில்லா வாக்காளர்கள் பெயர் நீக்கவும் , வாக்காளர்களின் தகவல் மாறியிருந்தால் திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தது. சரி பார்க்க பட்ட பட்டியல் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. இன்டர்நெட்டில் பார்க்க நேரமில்லையா.. நீங்கள் இருந்த இடத்திலேயே தகவல் பெற ஏற்பாடு செய்திருந்தது. நாம் குறிப்பிட்ட எண்ணிற்கு
( 51913 ) VOTE என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் வோட்டர் ஜடி ( VOTER ID ) எண்ணை பதிவு செய்து என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் உடனடி AUTO REPLY யாக ஒரு SMS வரும்.
அதில் உங்கள் வோட்டர் ஐடி எண் நீங்கள் வோட்டு போட வேண்டிய பூத் உங்கள் முகவரி வயது என்று எல்லாமே இருக்கும்.
இதே முறையில் தகவல் பெறும் முறையை தான் ரேஷன் கார்டுகளை பற்றிய தகவல்களை வீடு வீடாக வெரிபிகேசன் செய்து முடிந்த பின் சரி பார்க்கப்பட்ட புதிய பட்டியல் பற்றி தகவல் பெற இணையத்திலும் SMS மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. SMS மூலம் தகவல் எப்படி உடனடியாக பெற முடிகிறது.
நீங்கள் தொடர்பு கொள்ளும் 5 இலக்க SMS எண் குறிப்பிட்ட தகவல் ( DATA BASE ) அடங்கிய கம்பியூட்டருடன் தொடர்பில் இருக்கும். அதே போல் அந்த கம்பியூட்டரும் இன்டர்நெட் இணைப்பில் தொடர்பு இருக்கும். அதனால் தான் நீங்கள் SMS அனுப்பிய மறுகணமே நீங்கள் கேட்ட தகவல் AUTO REPLAY ஆக வந்து விடுகிறது.





டேலி Tally.ERP9 BETA 2.0 வெளீயீட்டிலும் ( RELEASE ) இந்த SMS முறை தான் பின்பற்ற படுகிறது. இதற்கு உங்கள் டேலி Tally.ERP9 அடங்கிய கம்பியூட்டர் இன்டர்நெட் இணைப்பிலும் குறிப்பிட்ட SMS எண் இணைப்பிலும் தொடர்பில் இருக்க வேண்டும். இப்போது குறிப்பிட்ட அந்த 5 இலக்க எண்ணுக்கு நீங்கள் SMS செய்து பேங்க் பேலன்ஸ் முதல் பார்ட்டி பேலன்ஸ் வரை இருந்த இடத்திலிருந்தே பெறலாம். நிழல் போல் தொடரும் தகவல் சேவை SMS வழி உங்கள் இருப்பிடம் தேடி வருகிறது. Tally என்றாலே எளிமை ( SIMPLICITY ) மட்டுமல்ல புதுமையும் கூட என்பதை இந்த SMS வசதி மூலம் மீண்டும் Tally.ERP9 நிருபித்திருக்கிறது. இந்த விரல் நுனியில் தகவல் பெறும் உத்தியால் நேரம் மிச்சமாகிறது. வீண் அலைச்சல் இல்லை. போக்குவரத்து செலவும் மிச்சமாகும்.



Tally ERP9

Sep 11, 2010

கன்பர்மேசன் லெட்டர் Tally ERP9

Tally ERP9





¤ கன்பர்மேசன் லட்டர் ¤ ஒரு ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்றுவரவு ( SALES ) கொண்ட வியாபாரிகள் தங்கள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி. ( 2010-2011 ) ஆண்டிற்கு 60 லட்சம் என லிமிட் கூடுதலாக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டின் கணக்கை ஆடிட்டரிடம் கொடுத்திருப்பீர்கள். உங்களது பேலன்ஸ்சீட்டில் அதிக பாக்கி தொகை கொண்ட (SUNDRY DEBTOR) பார்டியிடம் இருந்து CLOSING BALANCE ஜ உறுதி செய்ய CONFIRMATION LETTER வாங்கி தர சொல்லியிருப்பார். இதற்காக ஒரு ஆண்டிற்கான தகவலை லட்டராக MS WORD , EXCELலிலோ டைப் செய்ய தேவையில்லை. உங்கள் TALLY யில் குறிப்பிட்ட அந்த பார்ட்டியின் லெட்ஜர் ஓபன் செய்யுங்கள். இப்போது ALT+P என்ற SHORTCUT KEYஐ பயன்படுத்தி பிரிண்டிங் மெனுவுக்கு செல்லுங்கள்.இப்போது (ESC) பட்டனை அழுத்துங்கள். NORMAL LEDGER அல்லது CONFIRMATION OF A/C என இரண்டு OPTION வரும். அதில் CONFIRMATION OF A/C என்பதை செலக்ட் செய்து பிரிண்டிங் OK செய்யவும். TALLY பிரிண்ட் அவுட்டில் FROM , TO அட்ரஸீடன் CONFIRMATION LETTER இருக்கும்.
அதில் எங்கள் கணக்கில் உங்கள் பாக்கி தொகை இவ்வளவு. நீங்கள் சரக்கு அனுப்பிய தேதி , பில் நம்பர் , பில் தொகை ஆகியவையும் பார்ட்டியிடம் நீங்கள் பெற்ற தொகை ,தேதியும் தெளிவாக இருக்கும். பார்ட்டிக்கு நேரடியாக CONFIRMATION LETTER அனுப்பச் சொல்லி நீங்கள் விண்ணப்பிபது போல் இருக்கும்.


Tally ERP9

Sep 3, 2010

30 நாட்களில் டேலி 9 Tally ERP9

Tally ERP9



"30 நாளில் டேலி 9"
இப்படி டேலி பற்றி தமிழில் ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று தேடுபவர்கள் ஏராளம்.
கண்ணதாசன் பதிப்பகமும் தமிழ் கம்பியூட்டர் நிறுவனமும் தான் தமிழில் டேலி பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளனர்.

சரி விஷயத்திற்கு வருவோம். புத்தகத்தை படித்து வீட்டிலிருந்தே டேலியில் தெளிவாக முடியுமா..?

ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
படிப்பது வேறு. படித்ததை நம் அன்றாட வாழ்வோடு பயன்படுத்தி முன்னேறுவது வேறு.


Tally ERP9



நகைச்சுவை ஒன்று படித்தேன்..
ஒருவர் சொன்னாராம் ஆங்கிலத்தில் எந்த வார்த்தைக்கும் என்னால் அர்த்தம் சொல்லமுடியும்.அதற்கு அவருடைய நண்பர் நீ ஆங்கிலத்தில் எவ்வளவு மதிப்பெண் எடுப்பேன்னு கூட படிச்ச எனக்கு தெரியாதா என்றாராம்!
ஹலோ நாங்கள் எல்லாம் தெளிவா இருக்கிறோம். வீட்டில 2 டிக்கசனரி வாங்கி இருக்கிறேன்.
ஒன்னு LIFCO
இன்னொன்னு OXFORD.

இப்ப கேளு எந்த வார்த்தைக்கு அர்த்தம் வேணும்ன்னு.

கடினமான ஆங்கில வார்த்தைக்கு OXFORD மத்தெதுக்கெல்லாம் LIFCO எப்புடி
டிக்சனெரி போல தான் டேலி புக்கும் உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் வந்தால் புக்கை படித்து தெளிவுபடுத்தி கொள்ளலாம்.
சுருக்கமா சொன்னா ரிபரென்ஸ் புத்தகமா தான் பயன்படுத்த முடியும்.


Tally ERP9

Sep 1, 2010

டேலி எங்கே படிக்கலாம் ?!



டேலி எங்கே படிக்கலாம்..?!
சில நாட்களுக்கு முன்பு நண்பருடைய அலுவலகத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு டாக்ஸ் கன்சல்டன்ட் அலுவலகம்.

அந்த அலுவலகத்திற்கு ஒரு பெண் டேலி ஆபரேட்டர் தேவை என நாளிதழில் விளம்பரம் செய்த அனுபவத்தை கூறினார்.

அந்த ஞாயிற்றுகிழமை விளம்பரம் தேவை பகுதியில் பார்த்து ஏராளமான பெண்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

நண்பர் விளம்பரத்தில் அந்த பகுதியில் வசிக்கும் கணக்கு எழுத தெரிந்த டேலி மென்பொருளை இயக்க தெரிந்த பெண் தேவை என தெளிவாக விளம்பரம் கொடுத்திருந்தார்.

நேர்முக தேர்விற்கு வந்த பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் 7000 ரூபாய் சம்பளத்தை கேட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் அனைவரும் பல்வேறு கடைகளில் விற்பனை பிரிவில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்தனர்.

ஆனால் டேலி கோர்சை
CSC-யில் படித்தேன்.

APPOLO-வில் படித்தேன்.

மக்கள் கல்வி இயக்கத்தில் படித்தேன் என்று சொன்னார்களாம்!





சரி , அப்போ டேலி உங்களுக்கு அத்துபடி தானே என்று கேட்ட போது தான் வில்லங்கமே ஆரம்பமானது!
நேர்முக தேர்வுக்கு வந்தவர்களெல்லாம் எங்களுக்கு டேலி தெரியும்.ஆனால் பில் புக் பர்சேஸ் பைல் வைத்து எப்படி என்ட்ரி போடுவதென்று ஒரு நாள் சொல்லிக் கொடுங்கள்.அதை வைத்து நாங்கள் பிக்அப் செய்து கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
காரணம் கேட்ட போது நீங்க டேலி 9 சாப்ட்வேர் வச்சிருக்கீங்க .நாங்க படிச்சது டேலி 6.3 என்று ஒருவரும் நான் டேலி 7.2 படிச்சேன்னும் சொல்லியிருக்காங்க.
வேலை தேடி நேர்முக தேர்விற்கு வந்தவர்கள் என்ட்ரி போட சொல்லி கொடுங்கள் என்பதை கேட்டதும் நண்பர் அரண்டு விட்டார்!