< தமிழில் டேலி Tally.ERP9 >

Nov 5, 2010

Tally.ERP9இல் பிரிண்ட் வியூவை ஜும் செய்ய..

¤ Tally.ERP9இல் பிரிண்ட் செய்ய ¤




நாம் வழக்கமாக டேலியில் பிரிண்ட் எடுக்க என்ன செய்வோம்..
ALT+P என்ற சார்ட்கட் கீயை பயன்படுத்துவோம்.

டேலியில் DISPLAY MENU விற்கு சென்று ஏதாவது ஒரு பக்கத்தை ஒபன் செய்யுங்கள்.
இப்போது
ALT+P என்ற சார்ட் கீயை அழுத்துங்கள்.

இப்போது திரையின் நடுவில் பிரிண்ட் செய்ய வேண்டிய பக்கத்தின் மாதிரி பக்கம்
( PRINT PREVIEW ) தெரியும். சரி..

பிரிண்ட் பிரிவியூ வை முழு திரையில் பார்க்க என்ன செய்வீர்கள்..



MOUSE உதவியோடு ZOOM என்ற எழுத்தை கிளிக் செய்து சிறிய திரையில் இருக்கும்
PRINT PREVIEWஐ முழு திரைக்கு கொண்டு வருவீர்கள்.

MOUSEஐ பயன்படுத்தாமலே நீங்கள் பிரிண்ட் பிரிவியூ வை பெரிதாக்கி பார்க்க ஒரு சார்ட் கட் கீ இருக்கிறது..!

நீங்கள் பிரிண்ட் செய்ய
ALT+P ஐ அழுத்தியவுடன் சிறிதாக பிரிண்ட் வியூ தெரியும்.

இப்போது
ALT+Z என்ற சார்ட்கட் கீயை பயன்படுத்துங்கள்.

இப்போது
PRINT VIEW முழு திரையில் தெரியும்.

பிரிண்ட் பிரீவியூ பார்க்காமல் பிரிண்ட் செய்ய விரும்பினால் டேலியின் வலது ஓரத்தில்
NO PREVIEW என்ற எழுத்தை கிளிக் செய்யுங்கள்.






இந்த வலைப்பதிவை உலகின் எந்த நாட்டிலிருந்து படித்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு எனது உளங்கனிந்த "தீபாவளி " நல்வாழ்த்துகள்.

தொலைதூர கைகுலுக்கலுடன் K.ராஜா..

Nov 1, 2010

Tally.ERP9இல் COPY & PASTE வசதி.




¤ Tally.ERP9 ¤



Tally-யில் COPY & PASTE வசதி இருக்கிறதா?!
Tally உபயோகபடுத்துகிற யார்கிட்டேயாவது கேட்டு பாருங்க..
பெரும்பாலும் நிறைய பேர் இல்லை என்று தான் சொல்வார்கள்..!

ஆனால் WORD, EXCEL-ல் COPY & PASTE வசதி இருப்பது போல் Tally-யிலும் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்களா..OK.

MS WORD & EXCELலில் COPY & PASTE எப்படி பண்ணுவீங்க..?

COPY செய்வதற்கு CTRL+C என்ற ஷார்ட் கட் கீயையும்,
PASTE செய்வதற்கு CTRL+V என்ற ஷார்ட் கட் கீயையும் பயன்படுத்துவீர்கள்.

அப்ப Tallyயில் COPY & PASTE செய்ய ஷார்ட்கட் கீ என்னன்னு கேட்கிறீங்களா..?

Tallyயில் COPY செய்ய
CTRL + ALT + C
என்ற ஷார்ட் கட் கீயையும்,
PASTE செய்ய
CTRL + ALT + V
என்ற ஷார்ட் கட் கீயையும் பயன்படுத்துங்கள்.

Tallyயில் இருந்து பார்ட்டி பெயரையும்,
ஏன் எழுத்துக்களையும் எண்களையும் கூட COPY செய்து
WORD & EXCELலில் PASTE செய்யலாம்.


உதாரணத்திற்கு DISPLAY MENUவிற்கு சென்று ஏதாவது வவுச்சரை ஓபன் செய்யுங்கள்..

அந்த வவுச்சரில் கடைசியாக உள்ள NARRATION BOXஇல் உள்ள எழுத்துகளை
(TEXT ஐ)
CTRL + ALT + C
என்ற ஷார்ட் கட் கீயை பயன்படுத்தி COPY செய்யுங்கள்.

இப்போது
CTRL + ALT + V
என்ற ஷார்ட் கட் கீயை பயன்படுத்தி
MS WORDஇல் PASTE செய்யுங்கள்.




¤ டேலி டிப்ஸ் ¤



பொதுவாக SHORTCUT KEYS என்பது சுருக்கு விசை என அழைக்கப்படுகிறது.
மவுசை ( MOUSE ) தொடாமலேயே KEY BOARD
(விசைப்பலகை) மூலமாகவே வேகமாக என்ட்ரி செய்ய உதவுவதே ஷார்ட் கட் கீ ஆகும்.
ஷார்ட் கட் கீயை பயன்படுத்துவதன் மூலம் என்டிரிகளை வேகமாக பதிவு செய்வதால் நிறைய நேரம் மிச்சமாகும்.











[ இந்த டேலி தளத்திற்கு வருகை தந்து படித்த, ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!

இடுகை பற்றிய தங்களின் எண்ணக் கருத்துக்களை,
ஓரிரு வரியாயினும் பின்னூட்டத்தில் தெரிவித்தால்,
தளம் மற்றும் இடுகை பற்றிய சுய மதிப்பீடு அறிய உதவும். ]