< தமிழில் டேலி Tally.ERP9 >

Oct 20, 2011

போடுங்கம்மா ஓட்டு டேலி சின்னத்தை பார்த்து..



டேலி இன்வாய்சில் கம்பெனி லோகோ (LOGO).



"போடுங்கம்மா ஓட்டு".
சமீப காலமாக எல்லோர் காதுகளிலும் ஒலித்த வார்த்தை தான் "போடுங்கம்மா ஓட்டு"

வழக்கமான தேர்தல் போல் கூட்டணி குழப்பம் இல்லாமல் பெரும்பாலும் அனைவரும் தனித்தே நின்றனர் இந்த உள்ளாட்சி தேர்தலில்.

வாக்கு சேகரிக்க வந்தவர்கள் உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்ட கையோடு தங்கள் சின்னத்தையும் காண்பித்து உங்களது பொன்னான வாக்குகளை கேட்டு சென்றிருப்பார்கள்.

கட்சிகளுக்கு கொள்கை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு கொடியும் சின்னமும் முக்கியம்.

வாக்களர்களின் மனதில் சென்றடைவது சின்னங்களே.

DMK (திராவிட முன்னேற்ற கழகம்)
சின்னம் உதயசூரியன்.

ADMK (அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்)
சின்னம் இரட்டை இலை.

பா.ம.க-(பாட்டாளி மக்கள் கட்சி)
மாம்பழம்.

MDMK (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்)
சின்னம் பம்பரம்.

தே.மு.தி.க வின் சின்னம் கொட்டு முரசு.

இப்படி கரை வேட்டிகள் திரும்ப திரும்ப உங்களை தேடி வந்தாலும் வாக்குச்சாவடியில் நீங்கள் தேடுவது உங்களுக்கு பிடித்த சின்னம்.

ஆக உங்கள் எண்ணங்களில் எளிதில் குடி கொள்வது சின்னங்களே.

அவ்வளவு ஏன் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் உண்டு.

அரசியல்ல சின்னமெல்லாம் சாதரணமப்பா.
வேட்பாளர்களின் எளிதில் கவரும் சின்னங்களே வாக்காளர்களின் வாக்குகளாக மாறுகின்றன. அதனால் தங்களோட சின்னத்தை மக்களிடம் சென்று பிரபலபடுத்தி சேர்க்க பெருமளவில் விளம்பரம் செய்கிறார்கள்.

அப்போ உள்ளாட்சி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்..?

மக்களால் எந்த கட்சியின்
(வேட்பாளரின்) சின்னம் அதிகமாக முத்திரையிடப் படுகிறதோ அந்த சின்னத்தின் வேட்பாளரே வெற்றியடைவார்.

உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தல் , பாராளுமன்ற தேர்தல் என எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.

அரசியல்ல சின்னங்கள் சரி.

வியாபாரத்திற்கும் டேலிக்கும்
(TALLY) என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

பொதுவாக வியாபார சந்தைக்கு வரும் பொருட்கள் விளம்பரமில்லாமல் மக்களிடம் சென்றடைவதில்லை.

அவ்வாறு விளம்பரத்தப்படும் போது அந்த கம்பெனியின் லோகோ (LOGO) எனப்படும் சின்னங்களே அதிகமாக மக்களை சென்றடைகின்றன.

G FOR HEALTH என்ற காளீஸ்வரி நிறுவனத்தின் கோல்டு வின்னர் ஆயில் விளம்பரமானாலும் சரி,
உனா பானா என்ற உதயம் பருப்பு விளம்பரமானாலும் சரி,
ஒவ்வொரு கம்பெனியின் லோகோவும் அந்தப் பொருளோடு விளம்பரபடுத்த படுகிறது.
N என்ற எழுத்தோடு கூடிய லோகோ நேனசல் பானாசோனிக் கம்பெனியின் பொருள் என்பதை சர்வதேச அளவில் எடுத்து செல்கிறது.

அதே போலத் தான் S என்ற எழுத்தை கொண்ட லோகோ சின்னம் SONY நிறுவனத்தின் தயாரிப்பு களை உலகெங்கும் அடையாளம் காட்டுகிறது.

ஆக சிறிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ அவற்றின் லோகோ சின்னங்களே அவர்களின் தயாரிப்புகளை அடையாளம் காட்டுகின்றன.

BCCI மேட்ச் ஆனாலும் சரி,
IPL மேட்ச் ஆனாலும் சரி அதற்கும் ஒரு லோகோ உண்டு.

வித்தியாசமாக S என்ற எழுத்தை கொண்ட மாருதி சுசூகி-யின் லோகோவை மறக்க முடியுமா.
இல்லை நரசுஸ் காபி, மர்பி ரேடியோ இவற்றின் லோகோகளைத் தான் மறக்க முடியுமா.
ஸ்டீவ் ஜாப்ஸ் - ன் ஐபோன், ஐபேடு- களை பிரபலபடுத்திய ஆப்பிள் சின்னம் எவ்வளவு பிரபலம்.

அவ்வளவு ஏன் தமிழக அரசின் லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்,
இந்திய அரசின் லோகோ சாஞ்சி சாரநாத் ஸ்தூபி,

மத்திய ரிசர்வ் வங்கியின் புலி சின்னம் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.









பொதுவாக லோகோ என்ற சின்னங்கள் மக்கள் மத்தியில் பொருள்களை விளம்பரபடுத்தவும் அந்த நிறுவனத்தை அடையாளப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. என்ன சார்... உங்க நிறுவனத்திற்கும் லோகோ சின்னம் இருக்கா..?

அப்ப கட்டாயம் நீங்க அந்த லோகோ சின்னத்தை விற்பனை பில், டெலிவரி செலான் , லட்டர் பேடு, விசிட்டிங் கார்டு என எல்லாவற்றிலும் பிரிண்ட் செய்திருப்பீர்கள்.

இதற்காகத் தான் Tally.ERP9 லிலும் லோகோ பிரிண்டிங் என்ற புதிய வசதி செய்து தரப்பட்டுள்ளது.