< தமிழில் டேலி Tally.ERP9 >

Aug 30, 2012

கண்ணா Tally ( டேலி ) கத்துக்க ஆசையா


* கண்ணா
( டேலி ) Tally கத்துக்க ஆசையா *


நீங்க Tally
( டேலி ) மென்பொருளை பயன்படுத்துபவரா..
தமிழகத்தை
சேர்ந்தவரா..
டேலி மென்பொருள் மூலம் வாட் வரி மாதந்திர விற்பனைவரி
படிவங்களை மின்னனு முறையில்
( E- FILE ) செய்து வருகிறீர்களா..
அப்படி
என்றால் இந்த பதிவு முக்கியமானது.

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (VAT )
சட்டத்தின் புதிய விதிப்படி இணைப்புகளில்
( ANNEXURE ) புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதாவது இதுவரை
FORM I -ல்
( PURCHASE ) கொள்முதலை
( ANNEXURE 1 ) இணைப்பு ஒன்றிலும் ,

( SALES ) விற்பனையை
( ANNEXURE 2 ) இணைப்பு இரண்டிலும் Tally (டேலி ) மென்பொருள் மூலம் EXCEL பைலாக எடுத்து E- FILE செய்து வருகிறோம்.
இணைப்புகளில் இனி புது
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி
( PURCHASE ) க்கான இணைப்பு
ஒன்றில் மட்டும் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

( SALES ) விற்பனைக்கான இணைப்பு இரண்டில் எந்த மாற்றமும் இல்லை.
இணைப்பு
ஒன்றில் டெலிவரி செலானுக்காக புதிதாக ஒரு கட்டம் கூடுதலாக
சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடைசி கட்டத்தில் CATEGORYஐ பதிவு
செய்வோம். இதுவரை வெளிமாநிலத்திலிருந்து நாம் கொள்முதல்
( INTERSTATE PURCHASE ) செய்யும் போது CATEGORYஐ
" O " என்று போடுவோம்.

இனி இணைப்பு ஒன்றில் நாம் வெளிமாநில கொள்முதலை பதிவு செய்யும் போது
CATEGORY யில் O என்று பதிவு செய்தால் அந்த கொள்முதலுக்கு கட்டாயம்
"சி பார்ம்"
( C FORM ) கிடைக்காது. ஆமாங்க O என்று பதிவு செய்தால் WITHOUT
C FORM என பொருள் கொள்ளப்படும்.
அதாவது O என்ற CATEGORY இனி INTER-STATE
PURCHASES REQUIRING no FORM C என பொருள்படும்.

அப்ப வெளிமாநில
கொள்முதலுக்கு சி பார்ம் வாங்குவது எப்படி... ? அவசரப்படாதீங்க.
அதுக்கு தான் FORM I-ல் புதிதாக இணைப்பு A1-A
( ANNEXURE 1 - A ) என்ற புதிய இணைப்பு ஒன்று சேர்க்கப்படுகிறது. இந்த
இணைப்பு A1- A ன் மூலம் பதிவு செய்யப்படும் வெளிமாநில கொள்முதலுக்கு
மட்டுமே இனி சி பார்ம் கிடைக்கும்.

இணைப்பு ஒன்றில் வழக்கமாக பதிவு
செய்வதற்கும் இணைப்பு 1- A ல் பதிவு செய்வதற்கும் சில வித்தியாசங்கள்
உண்டு. பொதுவாக வெளிமாநில கொள்முதலை வரியுடன் சேர்ந்த மொத்த தொகையை
( NET AMOUNT ) தான் பதிவு செய்வோம். இதற்கு முக்கிய காரணம் வெளிமாநில
கொள்முதலுக்கு உள்ளீட்டு வரி சலுகை கிடையாது.
ஆனால் இனி இணைப்பு ANNEXURE
1 - A ல்

1 ) வெளிமாநில விற்பனையாளர் பெயர்,

2 ) வெளிமாநில வியாபாரியின் முகவரி,

3 ) அந்த கம்பெனியின் டின் ( TIN NO ) எண்,

4 ) COMMODITY CODE,

5 ) இன்வாய்ஸ்/ டெலிவரி நோட் நம்பர்

6 ) இன்வாய்ஸ் / டெலிவரி நோட் தேதி,

7 ) பர்சேஸ் ஆர்டர் நம்பர் ,

8 ) பர்சேஸ் ஆர்டர் தேதி,

9) கொள்முதல் தொகை
( WITHOUT CST ),

10 ) RATE OF CST TAX,

11 ) CST PAID,

12 ) TOTAL PURCHASE VALUE
( INCLUDING CST )
வரியுடன் கூடிய மொத்த தொகை இவ்வளவையும் தரனும்.

அதோட CATEGORYஐ மறக்காம " J "
என்று பதிவு செய்யனும்.
J என்ற CATEGORY என்பது INTER STATE PURCHASE AGAINST FORM C எனப் பொருள்படும்.

அதனால ANNEXURE 1 - A பதிவு செய்யும்போது கவனமா பார்த்து சூதானமா இருக்கனும்.

இதற்கான அரசு அறிவிப்பை விரைவில் எதிர்பாருங்கள்.

நம்ம டேலி
( Tally ) யும் இணைப்புகளின் புதிய மாற்றங்களை செய்து புது
STAT FILE வெளியிடும்.

தமிழக அரசு ஏன் இந்த மாற்றத்தை திடீரென செய்கிறது தெரியுமா..?

விபரம்
அடுத்த பதிவில்..

அன்புடன் Tally
( டேலி ) ராஜா.

Jun 8, 2012

புது வருடமும் புது கணக்கும்..

வண்டு முருகன்...
வண்டு முருகன்...

நீதிபதி :- ஆங்கில புத்தாண்டு
என்னைக்கு துவங்குது.

வண்டு முருகன்:-
கனம் நீதிபதி அவர்களே..!
ஆங்கில புத்தாண்டு ஐனவரி முதல் தேதியில் தொடங்குது யுவர் ஓனர்..?

நீதிபதி:- தமிழ் புத்தாண்டு எப்ப துவங்குது..?

வண்டு முருகன்:- ஆகா..
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கய்யா . நல்லா கேக்கிறாங்ராய்ங்க
டீடெயிலு. அதாவது சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டா
இருந்திச்சி. இப்ப 5 வருசத்திற்கு ஒரு தரம் சித்திரை , தை ன்னு அவங்க
நோக்கத்துக்கு மாத்திகிறாங்க. ஆகா.. நானா தான் அரசியல் பேசிட்டனோ.
பிசியா சூட்டிங் போயிக்கிட்டு இருந்த என்ன அரசியல பேச வச்சதால இப்படி
சிக்கி சீரழஞ்சி ஒரு பொழப்பும் இல்லாம வீட்டுல சும்மா உக்காந்துகிட்டு
சுட்டி டீவி பாத்துகிட்டு இருக்கேன். இப்ப திரும்பவுமா..

வேண்டாம்
விட்டிருங்க வலிக்குது... அழுதுருவேன்.

நீதிபதி:- வட இந்தியர்கள் எப்ப
புது கணக்கை துவக்குறாங்க..


வண்டு முருகன்:- ஒவ்வொரு வருசமும் தீபாவளி அன்னிக்கி வட இந்தியர்கள் புது வருட கணக்கை ஆரம்பிக்கிறாங்க.

நீதிபதி:- அப்புறம் எல்லா பேங்கிற்கு ஏப்ரல் முதல் நாள் புது வருட
கணக்கு சொல்லி லீவு விடறாங்க.அது ஏன் தெரியுமா...?

வண்டு முருகன்:-
அப்சக்ஜன் யுவர் ஆனர்.( ஓவரா கத்திட்டேனோ ) நான் என்னமோ ரிசர்வ் பேங்க்
கவர்னர் மாதிரி என் கிட்ட பேங்க் நிர்வாகத்தை பத்தி கேட்டா
எப்பூ...பூ...டி. என்னை ஓவரா கடுப்பேத்துறீங்க மை லார்ட். இத்தோட நான்
கிளம்புறேன்.


இந்தியாவில் வருமான வரி , விற்பனை வரி, வங்கிகள் ன்னு
எல்லா கணக்குகளும் ஏப்ரல் முதல் நாள் தான் புது வருடம் துவங்குகிறது.
அதனால் தான் நாம ஏப்ரல் முதல் தேதியில் துவங்கி
மார்ச் 31 ல் முடியும்
காலத்தை கணக்கியல் ஆண்டாக நிர்வகிக்கிறோம்.

வழக்கமா நாம் ஏப்ரல் முதல்
தேதியில் தான் புதுக் கணக்கு பூஜை போடுவோம்.

புதுக் கணக்கு பூஜை போட
என்னென்ன புத்தகங்கள் வாங்குவோம்.
அன்றாட வரவு செலவு எழுத
ROUGH DAY BOOK
( கச்சா குறிப்பேடு ),
DAY BOOK,
LEDGER,
புது BILL BOOK, PURCHASE
REGISTER,
SALES REGISTER,
BANK PASS BOOK
( OSWAL ),
PARTY
COLLECTION BOOK ( OSWAL ),
BOX FILE,
பேனா ,
பென்சில்,
ரப்பர்.

Tally மென்பொருள் இருக்கிறதால இப்ப இதையெல்லாம் வாங்க வேண்டிய
அவசியமில்லாம போயிருச்சு.

Paper less work, Virtual office என்கிற ரேஞ்சுக்கு டேலி மென்பொருள்
டெவலெப் ஆயிட்டு வருது.

VOUCHER ENTRY மூலம் Tally-ல் பதிவு செய்தாலே
போதும். உங்களுக்கு தேவையான
DAY BOOK,
BANK BOOK,
CASH BOOK,
BALANCE
SHEET,
PROFIT & LOSS,
TRIAL BALANCE,
STOCK BOOK ,
PARTY LEDGER, என
எல்லா ரிபோர்ட்டும் கிடைத்து விடும்.
சரி, வாங்க, Tally யில் எப்படி
புது வருட கணக்கை துவங்குவது எனப் பார்ப்போம்.

RAJ & CO என்ற கம்பெனியில்

2011-2012 வருடத்திற்கு கணக்குகளை பதிந்து வச்சிருக்கீங்க.

இப்ப
RAJ & CO-விற்கு
2012 - 2013 வருடத்திற்கான கணக்குகளை VOUCHER ENTRY மூலம்
பதியனும். இதற்கு
RAJ & CO என்ற பெயரில் புதிதாக ஒரு கம்பெனியை Tallyல்
துவக்குவீங்களா.
சாரி பிரதர். புதிதாக கம்பெனி துவக்குவது சுலபம்.
ஆனா
அப்படி செய்தால் 2011-2012 வருடத்தில் நாம் பயன்படுத்திய LEDGERகளை
மீண்டும் நாம்
2012-2013 வருட கம்பெனிக்கும் புதிதாக துவக்க
வேண்டியிருக்கும்.

இதனால் நமக்கு ஏராளமான நேரம் வீணாகும்.

Tally யில் இந்த
இடையூறை போக்க ஒரு சுலபமான வசதி செஞ்சிருக்காங்க.

அந்த வசதிக்கு பேரு தான்

SPLIT COMPANY DATA.

இப்ப RAJ & CO கம்பெனியை
ஓபன் செய்யுங்க.

CURRENT PERIOD
2011 - 2012 என இருக்கா..

ALT+F2வை
அழுத்துங்கள்.

CHANGE PERIOD என்பதை
1.4.2012 to
31.3.2013 என்று
மாற்றுங்கள்.

இப்ப CURRENT PERIODஐ பாருங்க.
அடுத்த வருசத்திற்கு
(2012-2013) மாறியிருக்கா. Raj & co என்ற கம்பெனி
1.4.2011 to 31.3.2013
என இரண்டு வருட கணக்கா மாறியிருக்கு.
இப்ப நாம
SPLIT COMPANY ஆப்சன்
மூலம் இரண்டு வருட கணக்கை தனியா பிரிச்சி Raj & co விற்கு 2011-2012 ,
2012-2013 என்று இரண்டு கம்பெனியா மாற்றனும். எப்படி..?

ALT+F3 ஐ
அழுத்துங்க.

அதில் SPLIT COMPANY DATA என்ற ஆப்சனை தேர்வு செய்து ENTER
பட்டனை அழுத்துங்க. இப்ப SELECT COMPANY என்ற ஆப்சனை தேர்வு செய்து
ENTERஐ அழுத்துங்க.

SPLIT FROM என்பதற்கு
1.4.2012 என்று மாற்றவும்.

SPLIT COMPANY என்பதற்கு YES என்பதை அழுத்துங்கள். SPLITING COMPANY IN
PROGRESS என்ற கட்டம் திரையில் தெரியும். சிறிதுநேரம் கழித்து பார்த்தால்
இரண்டு புதிய கம்பெனி துவக்கப் பட்டிருக்கும்.
அதாவது
RAJ & Co
2011 -2012
(From 1.4.2011) என்றும்
2012-2013
(From 1.4.2012)
என்றும் இரண்டு கம்பெனிகள் இருக்கும்.

அதேசமயம்
RAJ & co பழைய
கம்பெனியும் அப்படியே எந்த மாறுதல் இல்லாம இருக்கும் .

2011-2012 கம்பெனி
டேட்டா நம்மிடம் இருப்பதால் SPLIT COMPANY மூலம் புதிதாக உருவான
RAJ & Co
(from 1.4.2011 ) என்ற கம்பெனியை DELETE செய்யுங்கள்.

RAJ & CO
(from 1.4.2012) என்ற புதிய கம்பெனியில் நாம் பதிவிட துவங்கலாம். அதற்கு முன்
கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள் சில உள்ளன..

May 8, 2012

இது டெலி ஷாப்பிங் ( Tele Shopping ) அல்ல! டேலி ஷாப்பிங்!! ( Tally Shopping )

இது டெலி ஷாப்பிங்
( Tele Shopping ) அல்ல.
டேலி ஷாப்பிங்.
( Tally Shopping )

ஒரு மாலை வேளை..

மனைவி , பிள்ளைகளோடு ஷாப்பிங் பண்ண
கிளம்பறீங்க..
என்னென்ன வாங்கணும். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு
பட்டியல் போட்டிருப்பீங்க.

இப்ப உங்க பாக்கெட்டில் பொருட்கள் வாங்க
தேவையான பணமும்
DEBIT CARD ,
CREDIT CARDம் வச்சிருப்பீங்க.

பிக் பஜார்
( BIG BAZAAR ) கடைக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம். உள்ளே நுழையும்போதே
உங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வாசலிலே இருக்கும்
தள்ளுவண்டி
(TRALLY) எடுத்துகிறீங்க.
உள்ளே போனதும் கண்ணில் கண்ட
பொருள்களையெல்லாம் எடுத்து வைத்து கொள்வீர்களா?
நிச்சயமா அந்த காரியத்தை
செய்ய மாட்டீங்க. ஏனென்றால் நமக்கு என்ன தேவை என்ன வாங்கணும்னு நம்மகிட்ட
லிஸ்ட் இருக்கே. சில சமயம் நம்மிடமுள்ள லிஸ்டில் இல்லாத பொருளையும்
வாங்குவோம். காரணம் அவசரத்தில் நாம் அப்பொருளை லிஸ்டில் சேர்க்க
மறந்திருப்போம்.

ஒரு சில பொருட்கள் புதிதாய் சந்தைக்கு வந்திருக்கும்.

நமக்கு தேவையென்றால் அதையும் வாங்குவோம்.
ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நாம் எவ்வளவு பணத்தை பாக்கெட்டில்
வைத்திருந்தாலும் தேவையான பொருட்களை மட்டும் தான் வாங்குகிறோம். நமக்கு
தேவையில்லாத பொருட்களை வாங்கினா வீட்டில் இடத்தை அடைத்து கொள்ளும்.
அதே
போல நமக்கு தேவையில்லாததை வாங்கினா நமது மாதாந்திர பட்ஜெட்டும் குளறுபடி
ஆகிவிடும்.

சாதாரண குடும்பத்துக்கே இப்படினா Tallyக்கு எப்படி?

Tallyயும் மிகப் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் மாதிரி தாங்க.

நீங்கள்
நடத்துவது சிறிய கடையா அல்லது பெரிய நிறுவனமா.

நீங்கள் நடத்துவது சில்லறை
( RETAIL ) வியாபாரமா. அல்லது மொத்த ( WHOLESALE ) வியாபாரமா.

நீங்கள்
குறிப்பிட்ட பொருளை வாங்கி விற்கும் வணிகரா
( TRADER ) அல்லது
குறிப்பிட்ட ஒரு பொருளை உற்பத்தி
( MANUFACTURER ) செய்து விற்பவரா.

அல்லது

பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்துபவரா..


எல்லா வித
கணக்குகளையும் Tally மூலம் எளிதாக நிர்வகிக்க முடியும்.
Tally மென்பொருள்
என்றாலே
User friendly தாங்க. அனைவரும் பயன்படுத்த எளிதானது.
அது மட்டுமல்ல Tally மென்பொருள் என்றாலே
All is Well.
ஆமாங்க ஆல் இஸ் வெல்.
சாரிங்க Tally மென்பொருள் என்றாலே ALL IN ONE தாங்க.

Tally மென்பொருள் என்பது ஏதோ குறிப்பிட்ட வகை கணக்குகளை மட்டுமே
நிர்வகிக்க கூடியதல்ல.

Tally ஆல் எல்லா வகை கணக்குகளும் சாத்தியமாகும்.

ஆமாங்க கணக்கு வழக்கில் உங்கள் தேவை எதுவோ அதை எளிதாக்கி தருவது தாங்க
Tally ன் முக்கிய வேலையே.
Tally என்றாலே
Fit for all Business Accounts
என்பது தெரியுமா உங்களுக்கு.
பொதுவா புதிதாக கணக்கு துவங்கும் போது
புத்தகத்தில் மஞ்சள் தடவி
'உ' என்று எழுதிதான் துவங்குவோம்.

அதேபோலத்தான் Tally.ERP9ல் புதிதாக கம்பெனியை துவக்கும்போது
( CREATE COMPANY
) முதலில் நாம் செய்ய வேண்டியது.
Accounts onlyஆ அல்லது Accounts with
inventoryஆ என்பதை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்ததா Tallyல்
புதிதாக ஒரு கம்பெனியை துவக்கிய உடன் உங்களுக்கு தேவையான
F 11 ஆப்ஷன்களை
மட்டுமே தேர்வு செய்யனும்.
ஏனென்றால் F11 ஆப்ஷன் மூலம் தான் நாம்
கணக்குகளை எப்படி நிர்வகிக்க போறோம் என்பதை தீர்மானம் கொள்ளலாம்.

ஏனென்றால் எல்லாவித கணக்குகளையும் நிர்வகிக்க வேண்டும் என்பதால்
Tallyஇல் F 11 ஆப்ஷன்கள் ஏராளமாய் இருக்கும்.
அதை நம் தேவைக்கேற்ப
READY TO USE என்ற நிலைக்கு மாற்றிக் கொள்ள தெரிஞ்சுக்கணும்.
அதனால் உங்களுக்கு தேவையில்லாத ஆப்ஷன்களுக்கெல்லாம் YES என்று தேர்வு
செய்யக் கூடாது. தேவையில்லாத பொருளை எப்பவுமே வாங்க மாட்டீங்க.
அது போல
தேவையில்லாத ஆப்ஷனையும்
F 11 தேர்வு செய்யாதீங்க. அப்படி செய்தால்
என்னவாகும் தெரியுமா...?

வடிவேலு சொல்ற மாதிரி நாலு அஞ்சி இடியாப்பத்தை
மொத்தமா பிச்சி ஒரு தட்டுல போட்ட மாதிரி ஒரே கொச கொசன்னு ஆகி போயிடும்!

VOUCHER ENTRY கூட உங்களுக்கு குழப்பமாகி விடும்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே வெயில் இப்படி
கொளுத்துது.
லாஜிக் இல்லாம யோசிச்சு பாருங்க.
வீட்டில சும்மா தானே
இருக்குன்னு குளிருக்கு போடற ஸ்வட்டரை போட்டுகிட்டு வெளியில போவீங்களா.
ரோட்டுல போறவன் உங்களை பார்க்கிற பார்வை எப்படி இருக்கும். முதல்ல உங்க
உடம்பு தாங்குமா.

தேவைக்கேற்ப தான் எதையும் பயன்படுத்தனும்.

இப்ப
புரிஞ்சுதா
F 11 ஆப்ஷனின் முக்கியத்துவம்.
தேவையில்லாத விஷயத்தில மூக்கை
நுழைக்க கூடாது.

Tallyயில் தேவையில்லாத F11 ஆப்ஷனுக்கு YES கொடுக்க
கூடாது.
அடடா...! மறுபடியும் சாரிங்க.
அதுவந்து வேற ஒண்ணுமில்லைங்க.
Tally Shop பத்தி எழுதனும் ஆரம்பிச்சா டேக் டைவர்சன் ஆகி கடைசியில இப்படி
Tally shopping ஆகி போச்சுங்க. பரவாயில்லைங்க.

Tally Shop பத்தி அப்புறம்
சொல்லுறேன்.

ஓ கே வா..
ஓகே! ஓகே!

Apr 15, 2012

சொல்ல மறந்த சுருக்குவிசை ( Tally Shortcut Keys)

**¤ Tally ( டேலி ) யின் ஹாட் கீ ( HOT KEY ) ¤**


அவசரமாக திருச்சியிலிருந்து சென்னை செல்லவேண்டும். பேருந்து நிலையம் செல்கிறீர்கள். திருச்சி டூ சென்னை என்று போட்டிருந்தால் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிவிடுவீர்களா. சாதாரண கட்டணம் என எழுதியிருக்கும் பேருந்தில் நிச்சயம் ஏற மாட்டீர்கள். அதில் கட்டணம் குறைவென்றாலும் ஊரெல்லாம் நின்று செல்லும். அடுத்து எக்ஸ்பிரஸ் பேருந்து .இது குறைவான இடங்களில் மட்டும் நின்று செல்லும். அடுத்து பை பாஸ் பேருந்து. இது ஊருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் புறவழிச் சாலையில் விரைவில் சென்று விடும். அடுத்து பாயிண்ட் டூ பாயிண்ட் . திருச்சியில் கிளம்பினால் சென்னை தான். உங்கள் தேர்வு எதுவாக இருக்கும். பாயிண்ட் டூ பாயிண்ட் , எக்ஸ்பிரஸ் விரைவு பேருந்து , பை பாஸ் பேருந்து , நிச்சயம் இதில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்கும். காரணம் கட்டணம் அதிகம் என்றாலும் இந்த பேருந்துகளில் விரைந்து செல்ல முடிவதால் உங்கள் நேரம் மிச்சபடுகிறது. போகும் பாதை வெவ்வேறாக இருந்தாலும் சேருமிடம் ஒன்றே. இதையே தானே டேலியிலும் நீங்கள் எதிர்பார்ப்பீங்க.


டேலியில் விரைவாக வேலையை முடிக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் என்ன செய்யலாம். அதற்கு மவுஸை பயன்படுத்தாமல் கீ போர்டை அதிகம் பயன்படுத்த வேண்டும். அப்போ எந்த சுருக்கு விசையை ( SHORTCUT KEY ) எப்போது பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். உங்கள் கணினியின் டேலி-ஐ கிளிக் செய்யுங்கள். முதலில் COMPANY INFO தெரியும். அதில் வரிசையாக மெனுக்கள் தெரியும். ஒவ்வொரு வரியிலும் ஒரு எழுத்து தடித்த எழுத்தாக இருக்கும். இதில் நாம் தேர்வு செய்ய நினைப்பது 1 ) SELECT COMPANY ( ஏற்கனவே நாம் உருவாக்கி வைத்த கம்பெனிகளின் பட்டியல் ) 2) CREATE COMPANY (புதிதாக கம்பெனி உருவாக்க) 3) BACK UP (ஏற்கனவே உள்ள கம்பெனிகளின் டேட்டாவை நகலெடுக்க ( COPY செய்ய) 4)RESTORE ( கம்பெனி டேட்டாவை நிறுவுதல் ). இப்போது SELECT COMPANYக்கு செல்ல உங்கள் கீ போர்டில் S என்ற கீயை அழுத்துங்கள். அல்லது F1 என்ற கீ யை அழுத்துங்கள். புதிதாக டேலியில் கம்பெனி துவங்க வேண்டுமா..? C என்ற கீயை அழுத்தினால் கம்பெனி CREATION மெனுவிற்கு நேரடியாகச் செல்லலாம். சரி. S என்ற கீயை உங்களுக்கு தேவையான கம்பெனியை திறந்து கொள்ளுங்கள்.
Tally மென்பொருளை பொறுத்தவரை DISPLAYவிலோ அல்லது Voucher Entryன் போதோ எவ்வளவு தூரம் நாம் மௌஸை தொடாமல் விசைபலகையை மட்டும் பயன்படுத்தி சுருக்குவிசையை உபயோகப்படுத்துகிறோமோ அவ்வளவுதூரம் நேரம் மிச்சப்படும். வேலைநேரமும் சுவாரசியமாக இருக்கும். தலையை சுத்தி மூக்கை தொடாம உங்கள் வேலையை சுலபமா முடிக்கனும்னா கட்டாயம் டேலியின் சுருக்குவிசைகளை எங்கே எப்போது பயன்படுத்துறதுன்னு உங்களுக்கு தெளிவான அனுபவம் தான் கை கொடுக்கும். டேலி சுருக்கு விசைகள் பார்த்தாலோ படித்து ஞாபகத்தில் வச்சிகிட்டு இருந்தாலோ புரியாது. பழக பழக அனுபவத்துல தான் அதன் சிறப்பம்சம் புரியும்.

Apr 8, 2012

விலைவாசி உயர்வும் Tally ன் கட்டண மாற்றமும்

இந்த உலகில் மாற்றம் என்ற வார்த்தை தவிர மற்ற அனைத்துமே மாறுதலுக்கு உட்பட்டது . விலை வாசி விண்ணை நோக்கி செல்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையும் கூடி விட்டது. தினந்தோறும் கூடும் தங்கத்தின் விலையை கண்டு நடுத்தர மக்கள் நொந்து போய் உள்ளனர். தங்கம், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பங்கு சந்தையும் ஸ்திரமில்லாமல் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆடி காத்துல அம்மியே நகரும் என்பார்கள். அரசாங்கம் எம்மாத்திரம். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் டீசல் , கேஸ் விலைகளை உயர்த்தி விட்டது. அதுமட்டுமல்ல சமீபத்தில் மத்திய அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தியது. தமிழக அரசோ ஏற்கனவே பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருந்தது. தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. அரசாங்கமே மக்களின் அத்தியாவசிய துறைகளில் விலையேற்றம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கும் போது தனியார் நிறுவனங்களின் நிலையை யோசித்து பாருங்கள். என்னதான் விலைவாசி கூடி கொண்டு சென்றாலும் மக்கள் அதை சமாளித்து வாழ பழகி கொள்கிறார்கள்.வேற வழி.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் டேலி நிறுவனம் நீண்ட நாட்களாக உயர்த்தபடாமல் இருந்த Tally.ERP9ன் விலைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. புதிய விலை மாற்றம் 16.04.2012 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தற்போது ரூபாய் 13500 க்கு கிடைக்கும் Tally.ERP9 Single user ( ஒரு கணினி மட்டும் பயன்படுத்த கூடியது ) இனி 18000 ரூபாய்க்கு கிடைக்கும். அதே போல் தற்போது 40500 ரூபாய்க்கு கிடைக்கும் Tally.ERP9 Multi user ( பல கணினி இணைப்பில் பயன்படுத்த கூடியது) இனி 54000 ரூபாய்க்கு கிடைக்கும். அதனால் டேலி மென்பொருளை புதிதாக வாங்க இருப்பவர்கள் உடனே பழைய விலைக்கு வாங்கி பயனடையுங்கள். மறந்திராதீங்க 16.04.2012 முதல் புதிய விலை. இப்பவே வாங்கினா உங்களுங்கு கிடைக்கும் டேலியின் கொலவெறி ஆபர் . DONT MISS IT. இதே போல Tally யின் DOT NET வசதியை புதுப்பிக்கும் வருடாந்திர கட்டணமும் மாற்றியமைக்கப் படுகிறது. அதன்படி DOT NET வசதிக்கு SINGLE USERக்கு கட்டணம் 2700 லிருந்து 3600 ஆக மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல் MULTI USER க்கு DOT NET வசதிக்கான வருடாந்திர கட்டணம் 8100 லிருந்து 10800 ஆக மாற்றம் செய்யப்படுகிறது.